யாழ். ரயிலில் மோதுண்ட தம்பதி - திருமணமாகி இரு மாதங்களில் நடந்த விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

யாழ்ப்பாணத்திலிருந்து மாத்தறை நோக்கி சென்ற ரயிலில் தம்பதி ஒன்று மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக 26 வயதான கணவன் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார். படுகாயங்களுக்கு உள்ளான 24 வயதான மனைவி பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பலாங்கொட - கஹவ ரயில் நிலையத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டிருந்த தம்பதியே அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

நேற்று மாலை இவர்கள் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டுள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் கஹவ பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை நேற்றும் இன்றும் ரயிலில் மோதுண்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் செல்பி புகைப்படத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You may like this video