ஹட்டனில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டனில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டிக்கோயா வனராஜா சந்தியில் பொவந்தலாவையிலிருந்து சென்ற மோட்டார் சைக்கிளொன்றும், ஹட்டனில் இருந்து காசல்ரீ வரை சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுனரும், அதில் பயணித்த மற்றுமொருவருமே படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement