பெண் வைத்தியர் கொடூரமான முறையில் சித்திரவதை!

Report Print Murali Murali in சமூகம்

கண்டி போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய பெண் வைத்தியர் ஒருவரை கொடூரமான முறையில் சித்திரவதை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே வைத்தியசாலையில் வைத்தியராக பணியாற்றும் குறித்த பெண்ணின் கணவரே, குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் மூலம் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சித்திரவதைக்குள்ளான பெண் வைத்தியர் சிகிச்சைகளுக்காக கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து கடந்த இரண்டு வாரங்களில் மூன்று தடவை முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.


you may like this..