விஜேராமையில் குடியேறிய மஹிந்த

Report Print Ramya in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தனது விஜேராம வீட்டில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக குடியேறியுள்ளார்.

நேற்று முன்தினம் ,மஹிந்த ராஜபக்ஸவின் விஜேராம மாவத்தை வீட்டில் மத வழிப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வின் போது கூட்டு எதிர்கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.