லங்காசிறியுடன் இணைந்து அகில இலங்கை இந்து மாமன்றம் களுத்துறையில் நிவாரண பொருட்கள் கையளிப்பு

Report Print Akkash in சமூகம்

இலங்கையில் கடந்த மாதத்தில் அசாதாரண காலநிலையின் காரணமாக 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில் பலரும் தமது வீடுகளையும், சொத்துக்களையும் இழந்திருந்தனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் கிடைத்ததுடன், சர்வதேச ரீதியிலிருந்தும் உதவிகள் கிடைத்திருந்தன.

அந்த வகையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிசெய்வதற்காக அகில இலங்கை இந்துமாமன்றம் லங்காசிறியுடன் இணைந்து நிவாரண உதவி பொருட்களை சேகரித்து வந்தது.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களில் ஒரு தொகுதி ஏற்கனவே வழங்கி வைக்கப்பட்ட நிலையில் நேற்று இரண்டாவது தடவையாகவும் களுத்துறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.