பிரபல பௌத்த பிக்கு ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரி ஆரம்பிக்க முயற்சி?

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டின் பிரபல பௌத்த பிக்கு ஒருவர் தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் இலங்கையில் 15 தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி இலங்கை மருத்துவ சபைக்கு தற்போது விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அரச மருத்துவ கல்லூரிகளை வினைத்திறனானதாக மாற்றும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில், 15 தனியார் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு அரசியல்வாதிகள் எடுத்து வரும் முயற்சிகள் கவலையளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக முயற்சிக்கும் முக்கிய பௌத்த பிக்கு எவர் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.