காதலனுடன் தகராறு! தற்கொலைக்கு முயன்ற யுவதி

Report Print Murali Murali in சமூகம்

களு கங்கையில் குதித்து தற்கொலைக்கு முயன்ற யுவதி ஒருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. ஹட்டன் பகுதியை சேர்ந்த 19 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

ஹொரனை பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் குறித்த யுவதி, இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், காதலனுடன் ஏற்பட்ட தகராற்றை அடுத்து குறித்த யுவதி களு கங்கையில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.