மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சி! ஒரு மணித்தியாலம் கடைகளை மூடி எதிர்ப்பு போராட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மோகிங்டன் தோட்ட மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க கோரி இன்று (14) பகல் 2.00 மணியளவில் டயகம நகரில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

டயகம பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் நேற்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியை, அதே பிரதேசத்தை சேர்ந்த திருமணமான நபர் ஒருவர் வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சி செய்துள்ளார்.

தொடர்ந்து, அதே தோட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இதனை கண்டு கூச்சலிட்டுள்ளனர். இதன்போது சந்தேகநபர் அவ்விடத்தை விட்டு ஓடியதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது மோனிங்டன் தோட்டத்திற்கு பொது போக்குவரத்து இல்லாமை காரணமாகவே இவ்வாறான குற்றச்செயல்கள் இடம்பெறுவதற்கு காரணமாக உள்ளதாக பெற்றோர்களும் மாணவர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது டயகம நகரில் உள்ள 59 கடைகளும் சுமார் ஒரு மணித்தியாலம் மூடப்பட்டு ஆதரவு வழங்கிருந்தமை குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement