வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

Report Print Gokulan Gokulan in சமூகம்

கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் குறித்த வைத்தியசாலையின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், குறித்த நபரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து சென்ற போதே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்கொலை செய்துகொண்ட நபர் உயிரிழந்துள்ளதுடன் அந்த நபர் வத்தேகம பகுதியை சேர்ந்த 69 வயது மதிக்கத்தக்கவர் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்