கிழக்கு மாகாணத்தில் 259 கலைப்பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்

Report Print Victor in சமூகம்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த கலைப்பட்டதாரிகள் 259 பேருக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியின் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், மாகாணசபை தவிசாளர் சந்திரதாச கலபதி, பிரதம செயலாளர் சரத் அபய குணவர்த்தன உட்பட பல மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பங்கேற்று ஆசிரியர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.