முன்னாள் புலனாய்வு அதிகாரியிடம் 8 மணிநேரம் விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்

வடக்கு, கிழக்கில் இயங்கும் கம்பி இணைப்பு தொலைக்காட்சி மற்றும் சில நிறுவனங்களின் மில்லியன் கணக்கான தொகை தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளதாக கூறப்படும் முறைப்பாட்டுக்கு அமைய தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தா விதாரணவிடம் இன்று 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு ஹெந்தா விதாரணவிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியது.

நிதி மோசடி விசாரணப் பிரிவின் அறிவிப்புக்கு அமைய இன்று முற்பகல் 9 மணிக்கு ஹெந்தா விதாரண, சென்றிருந்ததுடன் மாலை 5.30 வரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பண சலவை சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடத்தப்படுகிறது.

அதேவேளை கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போக செயய்ப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவும் கபில ஹெந்தா விதாரணவுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.