கைதை தடுக்கக் கோரும் ஞானாசார தேரரின் அடிப்படை உரிமை மனு மீது ஜுன் 22 இல் விசாரணை

Report Print Ajith Ajith in சமூகம்

தம்மைக் கைது செய்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானாசார தேரரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஞானாசார தேரர் குறித்த மனுவை தமது சட்டத்தரணிகள் ஊடாக நேற்று தாக்கல் செய்தார்.

தாம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகள் முடிவடையும்வரை மற்றும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும்வரை தாம் கைதுசெய்யப்படுவதை தடுக்குமாறுகோரி அவர் இந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் தலைமையிலான இரண்டு பேர் கொண்ட குழு இந்த மனுவை பரிசீலனை செய்ததுடன், அதனை எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் தீர்மானித்துள்ளது.