வாழைச்சேனை அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு

Report Print Viyu in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் மருதநகர் ஸ்ரீ சிவ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வு ஆலய பூசகர் எஸ். கோணேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அத்துடன், அம்பாளுக்கான மடைப்பெட்டி மற்றும் தீர்த்தம் மருதநகர் விநாயகர் ஆலயத்தில் பக்த அடியார்களின் பக்தி அரகர கோசத்துடனும், அம்பாளின் காவியமாலை பாடலுடனும் எடுத்து வரப்பட்டு அம்பாளின் திருக்கதவு திறக்கப்பட்டு முதல் நாள் திருச்சடங்குகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றது.

இன்றைய தினம் ஆரம்பமாகிய வருடாந்த திருச்சடங்கு மூன்று நாட்கள் அம்பாளுக்கான பூசைகள் மற்றும் அன்னதான வைபவங்களும் இடம்பெறவுள்ளது.

மேலும், இந்த நிகழ்வின் இறுதி நாளன்று விநாயகர் பொங்கல் பானை வைத்தல், அபிஷேக வட்டா ஏலவிற்பனை மற்றும் தீ மிதித்தலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.