இந்து மாமன்ற ஸ்தாபகர் பாலசுப்ரமணியத்தின் நினைவு தின நிகழ்வு

Report Print Akkash in சமூகம்

அகில இலங்கை இந்து மாமன்ற ஸ்தாபகர் பாலசுப்ரமணியம் நினைவு தினம் கொழும்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்திருக்கும் கி. சிவகுமார் சிறப்புரை ஆற்றினார்.

அத்துடன், இந்த நிகழ்வில் சபைத்தலைவர் நீலகண்டன் மற்றும் தே ஈஸ்வரன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

மேலும், இந்த நிகழ்வில் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி. எம் சுவாமிநாதன், சமய தலைவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.