மன்னாரில் முதன்முறையாக சர்வதேச யோகா தின நிகழ்வுகள்

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் முதன்முறையாக இவ்வாண்டு சர்வதேச யோகா தின நிகழ்வுகள் யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றன.

குறித்த நிகழ்வுகள் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் சுகந்தி செபஸ்தியன் தலைமையில், நேற்று மாலை மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன.

இந்த யோகா தின நிகழ்வுகளில் மன்னார் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இதில் இந்திய துணை தூதுவர் ஆர்.நடராஜன், மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் உட்பட அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.