நிரந்தர தீர்வு வழங்கப்படும் வரையில் போராட்டம் தொடரும்!

Report Print Kumar in சமூகம்

தமக்கான நிரந்தர தீர்வினை வழங்கும் வரையில் தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ரி.கிஷாந்த் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் 118வது நாளாக தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது.

இந்த நிலையில் ஊடகங்களிலும் வாய்சொற்களினாலும் தமக்கான நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றபோதிலும் இதுவரையில் எந்தவித உறுதியான உறுதிமொழிகளும் வழங்கப்படவில்லையெனவும் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவித்தார்.

அனைத்து பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வினை வழங்கும் வரைக்கும் தமது போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தமக்கான நிரந்தர முடிவு கிடைக்கும் வரையில் எந்த சவால்கள் வந்தாலும் போராட்டத்தை முன்கொண்டுசெல்ல தயாராக இருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் தெரிவித்தார்.