சித்தாண்டி மாவடிவேம்பு பத்திர காளி அம்மன் ஆலய 54 ஆவது திருக்கதவு திறத்தல்

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு - சித்தாண்டி மாடிவேம்பு மாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 54 ஆவது வருடாந்த திருச்சடங்கு திருக்கதவு திறக்கும் விசேட பூசை இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

ஆலயத்தின் சடங்கு உற்சவத்தின் முதல் நாளாகிய இன்றைய தினம் சித்தாண்டி உதயன்மூலை நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து மடைப்பெட்டி எழுந்தருளச் செய்யப்பட்டதும் தேவாதிகள் சகிதம் மடைப்பெட்டியுடன் ஆலயம் வந்தடைந்ததும் சடங்கு உற்சவ கால பூசகர் சீ.ஜீவராசா தலைமையில் தீப ஆராதனை நடைபெற்றுள்ளது.

அத்துடன், ஆலயத்தின் திருக்கதவு பக்தர்களின் ஆரோகரா பக்தி கோசத்துடன் திறக்கப்பட்டு பத்திர காளி அம்மனுக்கு பூசைகள் நடத்தப்பட்டுள்ளது.

வருடாந்தம் இடம்பெறும் அன்னையவளின் திருச்சடங்கு உற்சத்தில் பெருமளவான பக்தர்கள் முதல் சடங்கு உற்சவம் தொடக்கம் இறுதி உற்சவம் வரை வழிபாடுகளுக்காக வருகை தருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மடைப் பெட்டி எழுந்தருளுடன் திருக்கதவு திறக்கப்பட்டு 7 நாட்களைக் கொண்ட திருச்சடங்கு உற்சவத்தின் இறுதி நாளாகிய சனிக்கிழமை (24) அன்று தீமிதிப்புடன் திருச்சடங்கு உற்சவம் நிறைவடையவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.