செல்பி புகைப்படம் எடுத்தால் சிறைத்தண்டனை

Report Print Vethu Vethu in சமூகம்
advertisement

ரயிலுடன் ஆபத்தான செல்பி புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வே கட்டளை சட்டத்திற்கமைய பயணிக்கும் ரயில் பயணி அல்லது ஏனைய நபர்கள் இவ்வாறு ஆபத்தான செல்பி புகைப்படங்கள் எடுக்க கூடாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

அதற்கமைய புகைப்படங்கள் எடுப்பவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரயில் வீதியில் பயணிப்பதே தண்டனை வழக்கப்பட வேண்டிய குற்றச் செயல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் ரயில் வரும் போது செல்பி புகைப்படம் எடுப்பது மிகவும் ஆபத்தான ஒரு விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரயில் பாதைகளில் செல்பி புகைப்படம் எடுத்த ஐந்துக்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement