இராணுவத்தினர் குப்பைகளை சேகரிக்க மாட்டார்கள்!

Report Print Kamel Kamel in சமூகம்

குப்பைகளை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு படையினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

குப்பைகளை முகாமைத்துவம் செய்யும் முனைப்புக்களில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என்ற போதிலும், நேரடியாக குப்பைகளை சேகரிப்பதில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.

நாள்தோறும் அதிகளவில் குப்பைகள் திரளும் இடங்களை அடையாளம் கண்டு அது குறித்து பிரதேச சபைகளுக்கு அறிவிக்கும் பொறுப்பினை இராணுவத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கென கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் இராணுவக் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் குப்பைகளை அகற்றுவோரை கைது செய்ய பொலிஸாருக்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.