வடக்கு, கிழக்கில் தியாகிகள் தினம் அனுஷ்டிப்பு

Report Print Ashik in சமூகம்

ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்களின் 27ஆம் ஆண்டு நினைவு தினமான தியாகிகள் தினம் மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.

குறித்த நினைவு தின அனுஷ்டிப்பு இன்று காலை ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மாவட்ட அலுவலகத்தில், அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது உயிர் நீத்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ஸ்தாபக தலைவர் கே.பத்மநாபா மற்றும் போராளிகள், பொது மக்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் வடமாகாண சபை உறுப்பினர் ஜீ.குணசீலன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஜேசுதாசன், மன்னார் நகர சபை முன்னாள் உறுப்பினர் மெரினஸ் பெரேரா உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

திருகோணமலையில் 25ஆவது தியாகிகள் தினம் நினைவுகூரல்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணி கட்சியினால் 25ஆவது தியாகிகள் தினம் திருகோணமலையில் நினைவுகூரப்பட்டுள்ளது.

குறித்த நினைவுகூரல் இன்று காலை திருகோணமலை கடல் முக வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் திருகோணமலை பிராந்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது வீரமரணம் எய்திய க.பத்மநாபாவின் நினைவாக பொது மக்களுக்கான இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் இலவச மூக்குக் கண்ணாடியும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈபிஆர்எல்எவ் இன் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வது நினைவு தினம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் 27வதுநினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா, தேக்கவத்தையில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிஅலுவலகத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் தலைமையில்நடைபெற்ற இவ்நினைவு தினத்தில் செயலாளர் நாயகம் பத்மநாபாவின் உருவப்படத்திற்குமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் அவர் தொடர்பான நினைவுப் பகிர்வும்இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, தியாகராஜா மற்றும் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் எம்.பி நடராஜா, கட்சி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் நினைவுகூரப்பட்ட தியாகிகள் தினம்

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.)தியாகிகள் தினம் இன்றுமட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கிழக்குமாகாண தலைமைக்காரியாலயத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பிரதித்தலைவரும் தமிழ் தேசியகூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தலைமையில் நடைபெற்றஇந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர்பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர்கலந்துகொண்டனர்.