முதலமைச்சரின் ஆதரவாளர் சாந்தி சிறீஸ்கந்தராசாவை சந்திக்க முயற்சி! கணவர் எதிர்ப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை வடமாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரின் ஆதரவாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் அவ்விடத்திற்கு வந்த வடமாகாண முதலமைச்சரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசத்தில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த இடத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொலிஸாரும் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைப்பதற்கு, சுகாதார அமைச்சரின் ஆதரவாளர்களின் இடத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது அவ்விடத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் கதைக்க முடியாது எனவும், அவர் எனது மனைவி நான் அவரிடம் கதைக்க அனுமதிக்க மாட்டேன் எனவும் அவரின் கணவர் தெரிவித்துள்ளார். இதன்பின்பு முதலமைச்சரின் ஆதரவாளர் பொலிஸாரினால் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசாவிடம் ஊடகவியலாளர்கள் வினவிய போது,

நான் மக்களை சந்திப்பதற்கு தயாராக இருக்கின்றேன். ஆனால் வயதுக்கு மூத்தவர்கள் தந்தைக்கு சமனானவர்கள். அவர்களுக்கு கை நீட்டி அடிப்பதற்கு முற்படுபவர்களுடன் நான் கதைக்க தயாராக இல்லை என தெரிவித்தார்.