லிந்துலையில் வெடிப்பு சம்பவம்: ஒருவர் காயம்

Report Print Thirumal Thirumal in சமூகம்
advertisement

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊவாக்கலை தோட்டத்தின் வெள்ளி மலை பிரிவில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

குறித்த நபரின் வீட்டு வாசலில் கிடந்த பொதி ஒன்றினை தள்ளியபோது பொதியினுள் காணப்பட்ட வெடி பொருள் வெடித்துள்ளது.

இதேவேளை அப்பகுதியில் பன்றி ஒன்றும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடித்து சிதறிய வெடி பொருட்களை லிந்துலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement