முந்திச்செல்ல முயலும் பேருந்துகளால் பயணிகள் அசௌகரியம்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் தனியார் பேருந்துகள் சில இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளை முந்திச்செல்ல முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குறித்த பேருந்துகளில் பயணிக்கும் பிரயாணிகள் பெரும் அசௌகரியங்களை சந்திப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டின்படி இன்று பிற்பகல் 12.30 மணியளவில் புதுக்குடியிருப்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச்செல்ல முயன்றுள்ளது.

இதன்போது அதிவேகத்தில் சென்ற அந்த தனியார் பேருந்தில் பயணித்த பிரயாணிகள் தமது தரிப்பிடத்தில் இறங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக கூறியுள்ளனர்.

மேலும், பேருந்தில் பயணித்த சிறுவனொருவரும், தாயாரும் அந்த பேருந்தில் இருந்து முறையற்ற விதத்தில் இறக்கி விடப்பட்டதாக அந்த பேருந்தில் பயணித்தவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முயற்சிக்கும் போது பயணிகளின் நலன் கருதாமல் செயற்படுவதோடு அவர்கள் பாதசாரிகளையும் பொருட்படுத்தவில்லை என பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.