வவுனியா மாவட்ட செயலகத்தின் இப்தார் நிகழ்வுகள்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் வருடாவருடம் இடம்பெற்று வரும் இப்தார் நிகழ்வுகள் இம்முறையும் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டால் இன்று மாலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த இப்தார் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். பி. றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த. திரேஸ்குமார், கணக்காளர், பிரதேச செயலாளர் கா. உதயராசா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் இ. நித்தியானந்தன், பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் வ.பிரதீபன், சர்வமத குருமார்கள், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், என மேலும் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.