மட்டக்களப்பு களுவன்கேணி பத்திர காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி பெருவிழா

Report Print Kannan Kannan in சமூகம்
advertisement

மட்டக்களப்பு களுவன்கேணி அருள்மிகு ஸ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச் சடங்கு உற்சவ மகா சக்தி பெருவிழா வெள்ளிக்கிழமை (16) விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பமாகி ஆலயத்தின் திருக்கதவு திறக்கப்பட்டு சக்தி பெருவிழா நடைபெற்றுவருகின்றது.

இந்நிலையில் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் சக்தி பெருவிழாவின் நான்காம் நாளான இன்று விநாயகப் பெருமானுக்கு விசேட பூசை இடம்பெற்று, அம்மனுக்கு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சோதிதாசன் அற்புதராஜ சர்மா ஐயரினால் பூசைகள் நடத்தப்பட்டு தோவதிகள் தலைசுத்தியாடி பக்தர்களுக்கு அருள்வாக்குகொடுத்த பின்னர் இன்றைய வழிபாடுகள் முடிவடைந்தன.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

சைவமும் தமிழும் தளைத்தோங்கும் மட்டுமா நகர் வடக்கே எழில் மிகு களுவன்கேணிபதியின் தொடக்க எல்லையில் வேப்பமரச் சோலையில் எழுந்தருளி இருக்கும் பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் நான்காம் நாள் உற்சவத்தில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மாவட்டத்தில் காணப்படும் காளி அம்மன் ஆலயங்களில் சற்று வித்தியாசமான முறையில் தேவாதிகள் உற்சானத்துடன் உருவெடுத்து தலை சுத்தியாடி நேர்த்திக்கடன் சுமந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அருள்வாக்கு வழங்கும் முறையின் காரணமாக ஒவ்வொரு நாள் வழிபாடுகளிலும் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது வழமை.

களுவன்கேணி கிராமத்தில் பக்தர்களுக்கு அருள்புரிந்து கொண்டிருக்கும் பத்திரகாளி அம்மன் ஆலயமானது கடந்த காலங்களில் குடிசையில் வைத்து பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நன்கொடையாளர்களின் உதவியுடன் பின்னர் குறித்த ஆலயம் பெரும் ஆலயமாக மாற்றியமைக்கப்பட்டது.

குறித்த ஆலயத்தின் சக்தி பெருவிழாவானது 7 நாட்களைக் கொண்டது இந்நிலையில் இறுதி நாளாகிய எதிர்வரும் 22 ஆம் திகதி தீ மிதிப்புடன் ஆலயத்தின் சக்திப் பெருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement