மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: திருகோணமலையில் நடமாடும் சேவை

Report Print Victor in சமூகம்

மாவட்டம் தோறும் சென்று மக்களின் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்ற செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் நடமாடும் சேவை இன்று திருகோணமலையில் இடம்பெறுகின்றது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் குறித்த திட்டத்தின் மூலம் திருகோணமலையில் 5வது முறையாகவும் குறித்த நடமாடும் சேவை இடம்பெறுகின்றது.

சிறுநீரக நோய் பரவலாகக் காணப்படும் பிரதேச மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்காக RO PLANT எனப்படும் நீர்ச் சுத்திகரிப்பு இயந்திரங்களை பெற்றுக்கொடுத்தல்.

குழாய் நீர் விநியோக இணைப்பை பெற்றுக்கொள்ள பொருளாதார வசதியற்ற குடும்பங்களுக்கு இலவச இணைப்புகளை பெற்றுக்கொடுத்தல்.

பாடசாலை, வைத்தியசாலை, மத வழிபாட்டுத்தலங்கள் முதலான பொது இடங்களுக்கு நீரைத் தேக்கி வைக்கக்கூடிய 30 நீர்த்தாங்கிகள் போன்றன குறித்தத் திட்டத்தின் மூலம் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று நோய் காணப்படுவதால் நோயாளிகளுக்கு வசதியேற்படுத்தும் நோக்கில் பல வைத்தியசாலைகளுக்கு கட்டில் மெத்தை கையளித்தல்.

சரியான பொது சுகாதார வசதியற்ற குடும்பங்களுக்கு கழிவறை வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்கு வசதியாக 75 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குதல்.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் செயற்பாடுகளை நெறிப்படுத்தி மக்களுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் சபையின் உப காரியாலயம் ஒன்றினை கிண்ணியாவில் திறந்து வைத்தல் போன்ற செயற்பாடுகள் நடைமுறைப் படுத்தவுள்ளதாகவும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், அப்துல்லாஹ் மஹ்ரூப், கே.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணசபை அமைச்சர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரியவதி கலப்பதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அத்தோடு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹீர், அருண சிறிசேன, ஆர்.எம்.அன்வர், முன்னாள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பாயிஸ் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.