புதையல்பிட்டி வீதி உடன் செப்பனிடப்படும்: பிரதேச அபிவிருத்திக்குழு

Report Print Theesan in சமூகம்

புதையல்பிட்டி வீதியில் கொட்டப்பட்ட கிரவல் பரவப்பட்டு வீதி உடன் செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நெளுக்குளம் புதையல்பிட்டி வீதியை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் வீதியின் நடுவில் கிரவல் கொட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற வவுனியா பிரதேச அபிவிருத்திகுழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

இவ் வீதி தொடர்பில் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. சில நாட்களாக கிரவலை வீதியின் நடுவில் கொட்டியுள்ளதாக தெரிவித்தனர்.

இவ் வேலைத்திட்டம் பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,

இவ் வேலைத்திட்டம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிரவல் கணக்கெடுக்கும் பணிக்காக கொட்டப்பட்டுள்ளது. உடனடியாக அவை கணக்கிடப்பட்டு போக்குவரத்துக்கு இலகுவாக்க வேண்டும் என கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு இதன்போது பணித்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பாக கிராம அபிவிருத்தி சங்கத்தினர்,

வீதி அகலம் இன்மையால் நடுவில் கிரவல் கொட்டப்பட்டுள்ளது. அதனை தொழில்நுட்ப உத்தியோகத்தர் பார்வையிட்டதும் பரவி வீதி செப்பனிடப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.