புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு

Report Print Reeron Reeron in சமூகம்

கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட சித்தாண்டி கிராமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்வரும் புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தரம் 5 மாணவர்களுக்கான விசேட கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கருத்தரங்கு இன்று நடைபெற்றதுடன், சித்தாண்டி இராமகிருஸ்ண வித்தியாலயம், சித்தி விநாயகர் வித்தியாலயம், மாவடிவேம்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம், உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம், விநாயகர் அலைமகள் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் தரம் 5ல் கல்வி கற்கும் மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

சித்தாண்டி அறக்கட்டளை மூலமாக நடத்தப்பட்ட புலமைப் பரிசில் பரீட்சைக்குரிய கல்விக் கருத்தரங்கானது பாடசாலை தவிர்ந்த ஏனைய விடுமுறை நாட்களில் முன்னோடிப் பரீட்கைள் மூலம் கருத்தரங்குள் இடம்பெற்று மாணவர்களின் பரீட்சை அடைவு மட்டத்தை அதிகரிக்க கூடியதாகவுள்ளது.


அத்துடன், இந்த கல்விக் கருத்தரங்குக்கு பெரியவட்டுவான், ஈரளக்குளம், இலுக்குப்பொத்தாணை, பெருமாவெளி ஆகிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளின் மாணவர்கள், பெற்றோர்கள், வளவாளர்கள், சித்தாண்டி அறக்கட்டளை உறுப்பினர்கள், அழைப்பு அதிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், சித்தாண்டி மத்திய மகா வித்தியாலயம் தொடக்கம் ஏனைய பாடசாலைகளின் கல்வி மட்டம் கடந்த காலங்களை விட குறைந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்து எதிர்காலத்தில் பாடசாலைகளின் கல்வி மட்டத்தை அதிகரித்துக் கொள்ள வாய்ப்பாக இவ்வாறான சமூக அமைப்புக்கள் மூலமாக முன்னெடுக்கப்படும் கல்வி கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றது என்றும் குறிப்பிடுகிறார்கள்.