ஏ9 வீதியில் விபத்து: இருவர் படுகாயம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா ஏ9 வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளுடன் பேருந்து மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து பற்றி தெரியவருவதாவது,

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தும் வவுனியாவில் இருந்து தாண்டிக்குளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

advertisement