வித்தியா கொலை வழக்கு: ஊடகவியலாளர்களை புலனாய்வுப் பிரிவினர் சோதனை

Report Print Sumi in சமூகம்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை நீதவானின் வாசஸ்தலத்தில் முற்படுத்திய போது, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அடையாள அட்டைகள் இல்லாத ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை கொழும்புக்கு தப்பிக்கவைக்க முயற்சித்தமை தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபர் நேற்றைய தினம் யாழ். ஊர்காவற்துறை நீதவானின் வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை புகைப்படம் எடுக்கவோ, காணொளி எடுப்பதற்கோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அனுமதி மறுப்பட்டது.

இந்த நிலையில், தமக்கு புகைப்படம் எடுக்கவும் செய்தி சேகரிக்கவும் அனுமதியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.