ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன், நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் இன்று காலை முச்சக்கர வண்டி ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஹட்டனில் இருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியும், கொட்டகலை நகரப் பகுதியில் குறுக்குப் பாதையிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த காருமே இவ்வாறு மோதுண்டுள்ளது.

விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் முச்சக்கர வண்டி மற்றும் கார் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.