கிழக்கு மாகாணத்திற்கான அல்குர்ஆன் மனனப் போட்டி

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாண ஹாபிழ் ஒன்றியத்தினால் கிழக்கு மாகாணத்திற்கான அல்குர் ஆன் மனன இறுதிப் போட்டி ஓட்டமாவடி மேற்கு பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

ஹாபிழ் ஒன்றியத்தின் செயலாளர் சி.எம்.முகமட் தன்சில் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஹாபிழ் ஒன்றியத்தின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக இடம்பெற்ற அல்குர் ஆன் மனன போட்டியில் இறுதிப் போட்டியில் 38 பேருக்கு இடையில் இன்றைய தினம் போட்டி இடம்பெற்றது.

இதன்போது வெற்றிப்பெருகின்றன மூவருக்கு பரிசில்கள் வழங்குதலும், ஏனையோருக்கான கௌரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஏறாவூரில் இடம்பெறவுள்ளதாக ஹாபிழ் ஒன்றியத்தின் செயலாளர் அல் ஹாபீஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், கிழக்கு மாகாண தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் கே.பி.எம்.ஹமீட் மற்றும் மௌலவிமார்கள், உலமாக்கள், பிரதேச பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.