இறால்குழி கிராமம் அழிவடையும் அபாயம்

Report Print Victor in சமூகம்

மூதூர் இறால்குழி கிராமம் அழிவடையும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இறால்குழி பகுதியில் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட விரோத மணல் அகழ்வே இதற்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

குறித்த கிராமத்தின் ஒரு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு நடைபெறுவதால் குறித்த பகுதி ஆழமாகி கடல் நீரானது ஆற்றினுள் செல்வதன் காரணமாக அப்பகுதியில் உள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கையானது இரவு, பகலாக அப்பகுதியில் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்கு பொலிஸாரும் துணை போகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நன்நீர் மீன்பிடி, விவசாயம், குடிநீர் என்பன பாதிக்கப்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் வேறு பகுதிகளில் தஞ்சமடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து அந்தப்பகுதியின் விவசாய சம்மேளனத் தலைவர் தங்கராசா, தாம் பல தடவை அரசியல் மட்டங்களிலும் அதிகார மட்டங்களிலும் தொடர்புகொண்டு குறித்த பிரச்சினை தொடர்பாக தெரிவித்த போதிலும் இதுவரை தமக்கான தீர்வு பெற்றுத் தரப்படவில்லை எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

advertisement