சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்
advertisement

பொகவந்தலாவயில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்திய பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் 18ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொகவந்தலாவ டியன்சின் மற்றும் பலாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

advertisement