வவுனியாவில் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்

Report Print Sathees in சமூகம்
advertisement

வவுனியா - கோவில்குளம் பகுதியில் அமைந்துள்ள தோழர் க. உமாமகேஸ்வரன் நினைவுத்தூபியில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 28ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம் (16) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதன்போது, உயிரிழந்த தமது உறவுகளின் படத்திற்கு பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் கனடா கிளையினரால் வறிய மாணவர்ககளுக்கான துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வீரமக்கள் நினைவு தினத்தை முன்னிட்டு விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற கழகங்கள், விளையாட்டு வீரர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தாத்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், தமழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம்,

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனா, வடக்குமாகாண சபை உறுப்பினர்களான சிவனேசன், ஜி.ரி. லிங்கநாதன், மற்றும் தமிழீழ விடுதலைக்கழகத்தின் யாழ் , மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, ஆகிய மாவட்ட பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

advertisement