தபால் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு! யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி

Report Print Mohan Mohan in சமூகம்
advertisement

வாள்வெட்டுக்கு இலக்காகிய தபால் உத்தியோகத்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த குணபாலன் வயது 50 என்பவரே இவ்வாறு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் குறித்த உத்தியோகத்தரின் வீட்டிற்குள் நுளைந்த மர்ம நபர் ஒருவர் அவருடன் உரையாடிக்கொண்டிருந்த சமயம் திடீரென கழுத்தை நோக்கி வாளினால் வெட்டி தாக்ககுதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படுகாயமடைந்த குறித்த உத்தியோகத்தர் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு - புதுகுடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

advertisement