மாடு கடத்த முற்பட்டவர் கைது

Report Print Theesan in சமூகம்

செட்டிக்குளத்திலிருந்து, வவுனியாவிற்கு மாடுகளை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் இன்று நெளுக்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு கடத்திச் செல்லப்பட்ட மாடும், அதை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெளுக்குளம் பாடசாலைக்கு முன்பாக இன்று காலை வாகனம் ஒன்றை மறித்து பொலிஸார் சோதனையிட்ட போது அந்த வாகனத்தில் சட்டவிரோதமான முறையில் மாடு கொண்டு செல்லப்படுவது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸார் வாகனத்தை பரிசோதித்த போது மாடு கொண்டு செல்லப்படுவதற்கான ஆவணங்கள், மாடு பெறப்பட்ட உரிமையாளர்களின் ஆவணங்கள் ஏதும் இன்றி மாடு வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடத்திச் செல்லப்பட்ட மாடு, மற்றும் குறித்த வாகனம் என்பனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு வாகனச் சாரதியையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவரை ஆரம்ப கட்ட விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.