பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த நண்பர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
advertisement

வில்பத்து பிரதேசத்தை சேர்ந்த சேனை விவசாயி ஒருவரின் மனைவியை பலவந்தமாக கடத்திச் சென்று காட்டில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த இரண்டு கசிப்பு விற்பனையாளர்களுக்கும் 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

யாய 18 இராஜாங்கன பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரை கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடத்திச் சென்று வில்பத்து காட்டில் வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தியதாக இரண்டு கசிப்பு விற்பனையாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

சந்தேகநபர்கள் இருவரும் நண்பர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனையில் பெண் வசித்து வந்த குடிசைக்கு சென்ற சந்தேகநபர்கள் அவரது கணவனை தாக்கி விட்டு பெண்ணை கடத்திச் சென்று கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் கற்பாறையில் உறங்கிக் கொண்டிருந்த போது, பெண் அவர்களுக்கு தெரியாமல் காட்டு வழியாக பொலிஸ் காவலரண் ஒன்றுக்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபர்களை கைது செய்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

நொச்சியாகம பொலிஸ் பிரிவின் யாய 18 ராஜாங்கன பிரதேசத்தை சேர்ந்த அசங்க பிரபாத் ஆரியதாச மற்றும் ரன்கோத் ஜேடிதுரயலாகே சமன் ஆகிய குற்றவாளிகளுக்கே இந்த கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

advertisement