நானு ஓயா பொலிஸ் பிரிவின் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு

Report Print T.Chandru in சமூகம்

நானுஓயா பொலிஸ் பிரிவின் அரையாண்டு பொலிஸ் அணிவகுப்பு இன்று நானுஓயா பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

குறித்த அணிவகுப்பு நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி அமரசேகர தலைமையில் இடம்பெற்றதோடு, நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த நிகழ்விற்கு மேற்பார்வையாளராகவும் பிரதம அதிதியாகவும் கலந்து கொண்ட மஹிந்த திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில்,

நுவரெலியா பிரதேசத்தில் 17 பொலிஸ் நிலையங்களிலும் முதலாவது சிறந்த பொலிஸ் நிலையமாக நானு ஓயா பொலிஸ் நிலையம் காணப்படுகின்றது.

17 பொலிஸ் பிரிவிலும் சிறந்த பொலிஸ் பொறுப்பதிகாரியாக பிரியந்த அமரசேகரதான் முதலாம் இடத்தில் இருக்கிறார்.

மத்திய மாகாண சிறந்த பொலிஸ் பட்டியலிலும் இவரின் பெயர் இருப்பது சுட்டிக்காட்டத்தக்கது என அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.