கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டு பின்னர் பல்வேறு காரணங்களால் தாம் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இதன்போது கரைச்சி பிரதேச செயலாளர், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,

குறித்த முடிவுகள் தன்னால் எடுக்கப்பட்டவை அல்ல. இதில் உள்ள குறைபாடுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு குழு ஒன்றுள்ளது. அது உங்கள் கிராமத்திற்கு வருகைதரும் போது இது தொடர்பில் நீங்கள் தெரிவிக்கலாம் என சுட்டிக்காட்டினார்.

இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.