கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி கிராமத்திற்கு உடனடியாக மாற்று வீதியூடாக நீர் விநியோகம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, தட்டுவன்கொட்டி கிராமத்துக்கு உடனடியாக குடிநீரை வழங்க வேண்டும் என கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் கிளிநொச்சி தட்டுவன்கொட்டி கிராமத்துக்கு பிரதேச சபை குடிநீர் விநியோகத்தை மேற்கொண்டு வந்த நிலையில் கடந்த 12 நாட்களாக அக்கிராமத்துக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படவில்லை.

இது தொடர்பாக இன்று இடம்பெற்ற கண்டாவளைப் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக இணைத் தலைவர்கள் கேள்வி எழுப்பியபோது, பிரதேச செயலர் ரீ.முகுந்தன் அக்கிராமத்துக்கான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மாற்று வீதியூடாக குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ளுமாறு இணைத்தலைவர்கள் உத்தரவிட்டனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவிற்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தவைர்களான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.