கிளிநொச்சியில் கடும் வறட்சி: பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், தங்களுக்கு உதவ முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் தெரிவிக்கையில்,

குளங்களை நம்பி செய்கை பண்ணப்பட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள புது ஐயங்குளத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

குளத்தில் நீர் வற்றியுள்ளமையால் துருசு ஊடாக நீரை பயிர்செய்கை நிலங்களிற்கு அனுப்புவதற்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

குளத்தின் நீர்மட்டம் துருசு பகுதிக்கு கீழாக காணப்படுவதால் விவசாயிகள் நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி தங்களது பயிர்களை பாதுகாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

கடும் வறட்சி காரணமாக குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது. இதனால் குறித்த குளத்தினை நம்பி செய்கை பண்ணப்பட்ட 40 ஏக்கர் சிறுதானிய செய்கையும், 20 ஏக்கர் நெற்செய்கையும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி பெரும் செலவுடன் தங்களது பயிரை முடியுமான வரை பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

தங்களது முயற்சியை அவதானித்த நீர்பாசன திணைக்களம் தங்களுக்கொரு நீர் பம்பியை தந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், நீர் இறைக்கும் இயந்திரத்தினை பயன்படுத்தி பயிர்ச்செய்கையை முழுமைப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை எனவும், ஒரு முயற்சியாகவே செய்வதாக விவசாயிகள் குறிப்பிடுள்ளனர்.