முல்லைத்தீவில் தொடரும் வறட்சியினால் மீனவர்களின் தொழில் பாதிப்பு

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் தொடரும் வறட்சி நிலை காரணமாக புதுமாத்தளன், சாலை சிறுகடலின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் இரட்டை வாய்க்கால், புதுமாத்தளன், வலைஞர்மடம், இரணைப்பாலை உள்ளிட்ட கிராமத்தில் சுமார் 2500ற்கு மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதாக சாலை மீனவ சங்கங்களின் தலைவர் மகாலிங்கம் மகாராசா தெரிவித்துள்ளார்.

மேலும், சுமார் 11 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை சிறுகடல் ஏரியில் 7 கிலோமீட்டர் தூரம் வரையில் கடல்நீர் வற்றி உப்புறைந்துள்ளதாகவும், மீதி இருக்கும் கடல்நீரும் இன்னும் சிலநாட்களில் வற்றிவிடக்கூடும் எனவும் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் அப்பகுதி மீனவர்கள் குடும்பங்களாக அங்கு சென்று எஞ்சிய மீன்களை பிடித்து சந்தைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இன்றுடன் இக்கடலில் நாங்கள் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே முள்ளிவாய்க்கால் - நந்திக்கடல் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டு காணப்படுகின்ற நிலையில் சாலைப்பகுதி மீனவர்களின் தொழிலும் தற்பொழுது பாதிக்கப்பட்டுள்ளனர்.