கடற்படைத் தளபதியை சந்தித்தார் அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகர்

Report Print Ajith Ajith in சமூகம்

அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி, அந்தப் பதவியிலிருந்து விடைபெற்றுச் செல்லும் கேர்னல் ரொபட் நொக்ஸ் Colonel Robert Knox Ross, கடற்படைத் தளபதி வயிஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தனவை சந்தித்துள்ளார்.

கடற்படைத் தலைமையகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் பணியாற்றிய காலத்தில் கடற்படைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்காக அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகருக்கு, கடற்படைத் தளபதி நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு நினைவுச் சின்னமொன்றையும் வழங்கியதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.