சைட்டம் மருத்துவக் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு அரசாங்கம் உதவும்: சுகாதார அமைச்சர்

Report Print Steephen Steephen in சமூகம்

மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரியை முன்னேற்ற அரசாங்கம் தொடர்ந்தும் உதவும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்துள்ளார்.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசுடமையாக்கும் நிகழ்வில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

இந்த வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக தொடர்ந்தும் முன்னேற்றப்படும்.

மருத்துவர் நெவில் பெர்னாண்டோ கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்த வைத்தியசாலையை சிறப்பாக பரிபாலனம் செய்வதை பார்க்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்போம்.

ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் இந்த வைத்தியசாலை அரசாங்கம் வைத்தியசாலையாக பணிகளை ஆரம்பிக்கும்.

நாட்டில் மருத்துவப் பீடங்களில் வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கு கதவை திறந்து 100 மாணவர்கள் அல்ல 500 மாணவர்கள் கற்கும் வகையில் முன்னேற்ற நாங்கள் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

advertisement