வவுனியா பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞர் கைது

Report Print Sathees in சமூகம்
advertisement

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 1கிலோ 790கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர் பரந்தனிலிருந்து அனுராதபுரம் நோக்கி போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்ட போதே வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

advertisement