ஐ.நாவிற்கு சிவில் அமைப்புக்களால் அனுப்பப்பட்ட அறிக்கை தொடர்பான செயலமர்வு

Report Print Kari in சமூகம்
advertisement

சிவில் அமைப்புக்களால் ஐ.நாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையின் தொடர் நடவடிக்கை மற்றும் ஐ.நாவின் விசேட பிரதிநிதிகளை அறிவூட்டும் சிபாரிசுகளை தயாரிப்பதற்கான செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த செயலமர்வு வவுனியா அருந்ததி மண்டபத்தில் இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் உலக நாடுகள் தொடர்பான மனித உரிமை வளர்ச்சி மீளாய்விற்காக இலங்கை அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு சமாந்தரமான மற்றும் உண்மையான ஒரு சிறந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளமை மற்றும் அதன் தற்போதய நிலைமைகள் தொடர்பாகவே ஆராய்வதற்காக செயலமர்வு நடைபெற்று வருகின்றது.

இந்த செயலமர்வை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், மொன்லார் உட்பட பல சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை சட்டத்தரணிகள் மற்றும் பல் துறை சார்ந்தவர்கள் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

இதில், இங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஏழு மாவட்டங்களின் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பூகோள கள மீளாய்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கை சிவில் அமைப்புக்கள் இணைந்து அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement