சித்தாண்டி அலைமகள் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி

Report Print Kannan Kannan in சமூகம்
advertisement

கல்குடா- கல்வி வலயத்திற்கு உட்பட்ட சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறப்பணி நிதியத்தின் அணுசரணையுடன் இயங்கும் அலைமகள் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு சித்தாண்டி சித்தி விநாயகர் வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, சித்தாண்டி மாவடிவேம்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் தலைவர் தலைமையில் இன்றைய தினம் பிற்பகல் நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இதன்போது ,பாலர்களுக்கான அனைத்து விளையாட்டு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் அதிதிகள் மற்றும் பாலர்களின் விநோத உடை போட்டி கண்காட்சி போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை, கல்குடா கல்வி வலயத்தின் கல்வி மட்டத்தை தீர்மானிக்கின்ற பல பாடசாலைகள், குறித்த வலயத்தில் காணப்படுவதாக வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் உள்ள வலயங்களில் எமது கல்வி வலயம் கீழ் மட்ட பின்னிலையில் இருப்பதற்கு காரணம் சித்தாண்டி பிரதேசத்தை சுற்றியுள்ள பாடசாலைகளின் கல்வி வீழ்ச்சியே எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் நூறு வீதம் சித்தியடையாமல் பல மாணவர்களின் கல்வி மட்டம் கீழ் மட்டத்தில் உள்ளதாகவும் உயர் பெறுபேறுகளையும் பெறக்கூடிய மாணவர்களும் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வழங்கி வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கு கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி, மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாயத்தின் சம்மேளனத் தலைவர் செ.அகிலன், முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் கோ.ஜீவாகரன், மற்றும் பாலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

advertisement