நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரனின் தந்தையின் ஏழ்மை! இந்திய ஊடகம் பாராட்டு

Report Print Vethu Vethu in சமூகம்

நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் பெயரை பயன்படுத்தாமல் வாழ்க்கையில் உயர்ந்த சின்னசாமி முத்தையா தொடர்பில் இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நான்கு பிள்ளைகளின் தந்தையான அவர் லக்கி லேன்ட் பிஸ்கட் தொழிற்சாலையின் உரிமையாளர்.

கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் தந்தை சின்னசாமி முரளிதரன் கண்டியில் மிகவும் பிரபலமானவர்.

73 வயதான அவர் ஏனைய பிரபல வீரர்களின் தந்தையை போன்று மகனின் பிரபல தன்மையை பயன்படுத்தி சவாரி செய்ய விரும்பாதவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் இலங்கையின் மூன்றாவது மிகப்பெரிய பிஸ்கட் தொழிற்சாலையின் நிர்வாக பங்குதாரராகவும் இருக்கிறார். அங்கு 200 ஊழியர்கள் தொழில் செய்கின்றனர். அவரால் இலகுவாக முரளியின் முகத்தை அந்த பிஸ்கட் பக்கட் அட்டைகளுக்கு பயன்படுத்தி விற்பனை செய்ய முடியும்.

எனினும் முரளியின் தந்தையான சின்னசாமி எந்தவொரு இடத்திலும் மகனின் முகத்தை பயன்படுத்தவில்லை. 5,000 சதுர அடி தொழிற்சாலையில் பிஸ்கட் உற்பத்தி செய்யும் அவர் ஒரு பிஸ்கட் பக்கட்டிலேனும் மகனின் புகைப்படத்தை பதியவில்லை.

“எனது மகன் சன்ரிட்ஜ்ஸ் 'பிஸ்கட் பிராண்டிற்கு ஒப்புதல் அளித்து வருகிறார், எனவே எனது பிஸ்கட்களை ஊக்குவிக்க அவரது முகத்தை நான் பயன்படுத்த முடியாது,” என எளிய மனிதர் சின்னசாமி முத்தையா தெரிவித்துள்ளார்.

தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மட்டுமே உரையாட விரும்புவதோடு, விலை மதிப்புடனான ஆடைகளை அணியாமல் சாதாரண லுங்கிகளை அணியவே அவர் விரும்புவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

73 வயதான அவர் தனது மகனைப் பற்றி பேசுகையில், தனது தொழிற்சாலைக்கு கீழே அமைந்துள்ள ஒரு சிறிய, சிமென்ட் கொல்லைப்புறத்தைக் காட்டி, 'முரளி' சிறு வயதில் தனது நண்பர்கள் மற்றும் சகோதரர்களுடனான தினசரி அங்கு தான் கிரிக்கெட் விளையாடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

அப்பாவும் மகனும் கிரிக்கெட்டைப் பற்றி அதிகம் பேசுவது அவரது பேச்சில் தெரிந்துள்ளதென அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.