அடிமை தொழிலாளிகளாக மத்திய கிழக்கு அனுப்பப்படும் வடக்கு, கிழக்கு விதவைகள்

Report Print S.P. Thas S.P. Thas in சமூகம்
advertisement

இலங்கையின் வடக்கு, கிழக்கில் போர் காரணமாக விதவைகளான பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமை தொழிலாளிகளாக அனுப்பி வைக்கும் வியாபாரம் நடந்து வருவதாக சர்வதேச செய்தி சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஆயிரம் பெண்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்பி வைக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
advertisement

இவர்களின் பெரும்பாலானவர்கள் விதவை பெண்கள் என்பது முக்கியமானது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி கடந்த 2011 ஆம் ஆண்டு 300 பெண்கள் மத்திய கிழக்கு சென்றுள்ளனர்.

ஒரு வருடத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக செல்லும் ஒரு லட்சம் பெண்களுடன் ஒப்பிடும் போது இது குறைவான சத வீதம் என்ற போதிலும் இதற்கு முன்னர் மத்திய கிழக்கிற்கு தொழில் புரியச் சென்ற பெண்களின் மிகவும் குறைவாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் வடக்கு கிழக்கில் நடந்த போர் காரணமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் சுமார் 65 ஆயிரம் பேர் காணாமல் போனதுடன் 10 லட்சம் பேர் இருப்பிடங்களை இழந்தனர்.

அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல பில்லியன் டொலர்களை செலவிட்ட போதிலும் சுமார் 90 ஆயிரம் விதவைகளின் மேம்பாட்டுக்காக குறைவான தொகையையே செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமது குடும்பங்களை பாரமரிக்க நிரந்தர வருமானம் இல்லாத விதவை பெண்கள் கடன்களை பெறுவதுடன் இப்படியான மனித கடத்தல்களில் சிக்கி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

முகவர் நிறுவனங்கள் சுகபோக வாழ்க்கை தொடர்பான கனவை உருவகித்து காட்டி உடன்படிக்கைகளில் கையெழுத்துக்களை பெறுகின்றன. உடன்படிக்கைகளில் உள்ள நிபந்தனைகள் குறித்து இந்த பெண்களுக்கு எந்த புரிதலும் இல்லை என கூறப்படுகிறது.

advertisement